ஐரோப்பா செய்தி

வேலைநிறுத்தங்களுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்

பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) வேலைநிறுத்தங்களுக்கான
ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்களுக்கு சம்பள உயர்வாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 3.5% வீதத்துக்கு மேல் சம்பள உயர்வை பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது.

இதனால் மற்ற தேசிய சுகாதார ஊழியர்கள் , செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள்,
ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உள்ளிட்டோர் குறைவான சம்பள உயர்வைப் பெறுவதால்,
சில தொழிற்சங்கங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்கள் தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சில தொழிற்சங்கங்கள் BMA தனது உறுப்பினர்களுக்காகச் சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும்
நோக்கத்தில் மட்டுமே செயல்படுவதாகவும், மற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்படுவதாகவும்
குற்றம் சுமத்தியுள்ளன.

ஏப்ரல் 7-ல் ஆறு நாள் வேலைநிறுத்தம் தொடங்க உள்ள நிலையில், BMA தற்போது 2.75% சம்பள உயர்வு வழங்கியுள்ளது,
இது பயிற்சி மருத்துவர்களுக்கான 3.5% பரிந்துரைக்கு கீழ் உள்ளது.

இந்நிலையில் “மருத்துவர்களின் உண்மையான சம்பளக் குறைப்புகளை மீட்டெடுக்கவே நாங்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளோம். இதற்காகவே வேலைநிறுத்தங்கள் அவசியம் BMA தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!