ஈரானிலுள்ள petrochemical ஆலைகள்மீது தாக்குதல்!
ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மஹ்ஷார் Mahshahr மற்றும் பந்தர் இமாம் Bandar Imam ஆகிய இரண்டு முக்கிய பெட்ரோகெமிக்கல் ஆலைகள் petrochemical complex மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பனவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளன என்று ஈரான் தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், தாக்குதல் நடத்த பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் ஈரானின் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்திவருகின்றன.
இதன்ஓர் அங்கமாகவே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




