சொந்த மண்ணில் சாதிக்குமா CSK?
IPL தொடரில் Chennai Super Kings, Punjab Kings ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் Chidambaram Stadium in Chepauk இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் Rajasthan Royals அணியிடம் தோல்வி அடைந்தது.
எனவே, இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் CSK களமிறங்குகின்றது.
சேப்பாக்கம் ஆடுகளம் கடந்த மாதம் நிறைவடைந்த T 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்றிலும் ஓட்டக் குவிப்புக்கு சாதகமாக இருந்தது.
அதேவளையில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.
இதே நிலையே தற்போதும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இதுவரை IPL தொடரில் 146 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 74 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி வெற்றி கண்டுள்ளது. 70 ஆட்டங்களில் இலக்கை துரத்திய அணி வெற்றி பெற்றுள்ளது.




