ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ரஷ்யா!

ஐரோப்பிய சந்தைகளுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்துள்ளார். அதற்கு பதிலாக “நம்பிக்கைக்குரிய” உலகளாவிய சந்தைகளை நாட  தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிரந்தரமாகத் தடை செய்வதற்கான சட்டப்பூர்வ முன்மொழிவை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்ய ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் புட்டினின் கருத்துக்கள் வந்துள்ளன.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “இப்போது மற்ற சந்தைகள் திறக்கப்படுகின்றன. மேலும் இப்போதே ஐரோப்பிய சந்தைக்கு வழங்குவதை நிறுத்துவது எங்களுக்கு அதிக லாபகரமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி போன்ற நம்பகமான கூட்டாளர்களுடன் இந்த அணுகுமுறையைப் பேணுவதாகவும் அவர்  உறுதியளித்தார்.

ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள போர்கள் வளைகுடாவிலிருந்து எரிவாயு ஏற்றுமதியைப் பாதித்துள்ளமையால் ஐரோப்பிய சந்தைகளில் எரிவாயு விலைகள் 75 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் புட்டினின் அறிவிப்பு வந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!