கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, பல கடல் பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி அல்லது
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





