மதத் தலைவர்களை அவமதிக்கிறது அரசு: சஜித் கொதிப்பு!
“ நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துவரும் சூழ்நிலையில் அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கின்றது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Opposition Leader Sajith Premadasa குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் அழிந்துவருகின்றது.
வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதித்து, விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தி, அவர்களை தாக்கி வருகின்றனர்.
எல்லா மதங்கள், எல்லா மதத் தலைவர்களுக்கும் சமூகத்தில் தகுந்த மரியாதையை வழங்க வேண்டும். பொதுமக்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
புத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் இன்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் தேரர்களை கேடுகெட்டவன், என்று அழைக்கின்றனர்.
முகநூல் மூலம் மகா சங்கரத்னத்திற்கும் அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களையும் அவமதித்து வருகின்றனர்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.





