அரசியல் இலங்கை செய்தி

“சஜித்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது” – மனோ!

” சஜித் எமது கட்சி தலைவர் அல்லர். அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என நாம் கட்டு படுத்த முடியாது.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

” எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி.

இரண்டு கடசிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் உடன்பாட்டு கூட்டணி இருக்கிறது.

இரண்டுமே ஒரே கட்சி அல்ல. சஜித் எமது கட்சி தலைவரும் அல்ல. அவர் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற தேசிய கூட்டணி தலைவர்.

அவரை, “அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள்” என நாம் கட்டு படுத்த முடியாது. நாம் கட்டுபடுத்துவதும் இல்லை.

அவரும் எம்மை அதே மாதிரி கட்டு படுத்த முடியாது. அவர், எம்மை கட்டு படுத்துவதும் இல்லை.

பாராளுமன்ற வாக்களிப்பில் கூட நாம் சுயாதீனமாகவும், சேர்ந்தும் வாக்கு அளிக்கின்றோம்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

2004ம் வருடம், சந்திரிக்கா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அமைத்து, வெற்றிலை சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து, அனுரவின் JVP போட்டி இட்டது.

பிறகு, 2005ம் வருடம், அதே சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,

மஹிந்த ராஜபக்சவை வேட்பாளர் ஆக்கி, அவரை போட்டி இட செய்து, பெரும் பாடு பட்டு, வடக்கில் தேர்தல் பகிஷ்காரம் நடத்த பட்ட நிலையில், மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கியதும், அனுரவின் JVP தான்.

ஆகவே, JVP எப்படி, மஹிந்த தலைமையிலான கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் பட்டதோ, அதேபோல்தான், தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் தலைமையிலான கட்சியுடன், புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் படுகிறது.

இது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டம் காரணமான அரசியல் நடைமுறை ஆகும். தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு, மாற்று வழி கிடையாது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!