அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததை தொடர்ந்து இன்று பிரித்தானியாவின் பங்குச் சந்தை குறியீடுகள் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புளூ-சிப் FTSE 100 நிறுவனத்தின் பங்குகள் 10,745.76 புள்ளிகளில் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் பங்குச் சந்தை குறியீடு 0.5% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ட்ரம்ப் வரிகளை விதிக்க மாற்று முறைகளைத் தேடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதை சந்தைகள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!





