ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க தீர்மானம்!
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணைக்காக அவர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிபிசி ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் (Luke Pollard), ஆண்ட்ரூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னாராக மாறுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மன்னர் சார்ள்ஸின் சகோதரரான ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் உள்ளட்ட அரச பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அரியணை ஏறும் வரிசையில் அவர் எட்டாவது இடத்தில் இருக்கிறார். இதன்காரணமாகவே புதிய சட்டத்தை கொண்டுவர பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்தி
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது: வின்ட்சரில் பதற்றம் – ரோயல் லொட்ஜை சூழ்ந்த பொலிஸார்





