23,000 பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஆசிரியர் நியமனம் உறுதி
23000 ஆசிரியர்களை இணைத்துககொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்குள் அவர்களை சேவையில் இணைப்பதற்கான பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடம் உட்பட ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி இவ்வாறு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





