இலங்கை

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்!

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல் 1 மணியளவில், இரு பேருந்துகள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 25 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டு பயணிகள் மூவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபந்து நிகழ்ந்ததாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!