உலகம்

ஐரோப்பா நோக்கி செல்லும் கனவில் உயிரை விட்ட 50 பேர் : இருவர் மட்டுமே மீட்பு!

லிபியா கடற்கரையில் குடியேறிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு 11 மணியளவில் திரிப்போலிக்கு மேற்கே 27 மைல் (44 கிமீ) தொலைவில் அல்-சாவியாவிலிருந்து புறப்பட்ட குறித்த படகானது, ஜுவாராவுக்கு (Zuwara) வடக்கே  விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

படகில் பயணித்த இருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் ஏறக்குறைய 50 பேர் மாயமாகியிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிர் பிழைத்த ஒருவர் தனது கணவரை இழந்ததாகவும், மற்றொருவர்  தனது இரண்டு குழந்தைகளை இழந்ததாகவும்  கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் மட்டும், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற பிறகு குறைந்தது 375 புலம்பெயர்ந்தோர் இறந்துவிட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!