இங்கிலாந்தில் புதிய கூட்டுத் தடுப்பூசி முறை இன்று முதல் அமுல்
இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு குழந்தை முறையான தடுப்பூசி இன்றி பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் இனி வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான 95 சதவீதத்தை எட்ட முடியாத நிலையில், அடுத்த வாரம் முதல் லண்டன், மிட்லாண்ட்ஸ் உள்ளிட்ட 12 பகுதிகளில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்குகிறது.
ஜிபி (GP) எனப்படும் பொது மருத்துவரிடம் பதிவு செய்யாதவர்கள் மற்றும் பயணச் சிக்கல் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்டு, செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மூலம் இந்தச் சேவை வழங்கப்படும்.
மேலும், இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறையாக சிக்கன்பாக்ஸ் எனப்படும் ‘சின்னம்மைக்கான’ தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இது எம்.எம்.ஆர் (MMRV) என்ற புதிய கூட்டுத் தடுப்பூசியாக அறிமுகப்படுத்தப்பட்டு, குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என சுகாதாரச் செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்





