உலகம் செய்தி

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – உலக நாடுகளின் அழுத்தம் போதாது என செலென்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் மீது 600 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 30 ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதல் மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் மத்திய சைட்டோமிர் (zhytomyr) பகுதியில் நான்கு வயது குழந்தை உட்பட சுமார் மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மீது உலக நாடுகள் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லையென்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸை நெருங்கும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் அவசர மின் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் காலத்தில், குறிப்பாக டிசம்பர் 23, 24 மற்றும் 25 திகதிகளில், ரஷ்யா பாரிய தாக்குதலை நடத்துவது வழக்கமானது என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பல வாரங்களாக அமைதியாக இருந்த தலைநகர் கீவ் இந்த தாக்குதலால் சீர்குலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!