உலகம் செய்தி

அதிகரிக்கும் மோதல் – சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகும் ஜப்பான்!

ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் நகரம் (ski resort town) இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகி வருகிறது.

வடமேற்கு நாகானோ (Nagano) மாகாணத்தில் உள்ள ஹகுபா கிராமம் (Hakuba) மேற்படி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

இந்த நடவடிக்கை வரும் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளுர் மக்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஹகுபா கிராமம் “கிராம நடத்தைகள்” குறித்து ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த சட்டம் இடையூறு விளைவிக்கும் நடத்தையை மட்டுமே தடைசெய்தது, அதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றவில்லை.

இந்நிலையில் புதிய விதிகள் எட்டு குறிப்பிட்ட வகை மீறல்களை அடையாளம் காண்கின்றன. அவை ஒரு குற்றவாளி அதிகாரப்பூர்வ உத்தரவை மறுத்தால் ¥50,000 (£237) வரை அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!