டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் – சாதனை படைத்த ஜோ ரூட்

லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் வரலாறு படைத்தார்.
இரண்டாவது நாளில் முதல் ரன் எடுத்தவுடன், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 37 வது சதத்தை அடித்தார். முதல் நாள் ஆட்டமிழக்கும் வரை, ரூட் 191 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி மோசமான தொடக்கத்தையே கொண்டிருந்தது. இந்திய அணி பந்து வீச்சாளர் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர், பென் ஸ்டோக்ஸ் (44), ஜோ ரூட் (104) மற்றும் கிறிஸ் வோக்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
இதன் பிறகு, ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர், எட்டாவது விக்கெட்டுக்கு இருவரும் ஏற்கனவே 106 பந்துகளில் 82 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் முறையே 51 மற்றும் 33 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். மதிய உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து ஏழு விக்கெட்டுகளுக்கு 353 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்டில் 37வது சதம்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, சச்சின் – 38, காலிஸ் – 45 ,பாண்டிங் – 41, சங்ககாரா – 38 சதங்களை அடித்திருந்தனர். ரூட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 37வது சதத்தை 192 பந்துகளில் பூர்த்தி செய்தார். இதில், 10 பவுண்டரிகளும் அவரது பேட்டில் இருந்து வெளிப்பட்டன. ரூட் ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். அவர் 199 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை விளையாடினார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள்
சச்சின் டெண்டுல்கர்: 51
ஜாக் காலிஸ்: 45
ரிக்கி பாண்டிங்: 41
குமார் சங்கக்கார: 38
ஜோ ரூட்: 37
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
ரிக்கி பாண்டிங் – 23
மஹேல ஜெயவர்தனே – 23
ஜாக் காலிஸ் -23
ஜோ ரூட் – 22
சச்சின் டெண்டுல்கர் – 22