உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

2025 உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
94 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
மீதமுள்ள மன்றங்களில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை உள்ளது.
நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல், நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் சுமுகமாக நிறைவடைந்தது.
(Visited 11 times, 11 visits today)