அமேசான் காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 வாரங்களுக்கு பிறகு 4 குழந்தைகள் கண்டுபிடிப்பு
கொலம்பியாவில் உள்ள Huitoto பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவர்கள் பயணம் செய்த விமானம் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொலம்பியாவில் அமேசான் காட்டில் ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அதிசயமாக 11 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.விபத்தில் உயிர் தப்பியது அதிசயம் என்றாலும், ஆனால் விபத்து நடந்த 2 வாரங்களுக்கு அந்த அடர்ந்த காட்டில் விலங்குகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்திருப்பது மிகப்பெரிய விடயமாகும்.
செஸ்னா 206 விமானம் அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாரா மற்றும் குவாவியர் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவேரியார் ஆகிய நகரங்களுக்கு இடையேயான பாதையில் ஏழு பேரை ஏற்றிச் சென்றபோது, மே 1ம் திகதி அதிகாலை இயந்திரக் கோளாறு காரணமாக மேடே எச்சரிக்கையை வெளியிட்டது. சிறிது நேரத்த்தில் விமானம் விபத்துக்குள்ளானது.100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து தேடியதையடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் 11 மாத குழந்தை, 13, 9 மற்றும் 4 வயது குழந்தைகள் அடங்குவர். இந்த 4 குழந்தைகளும் இறந்துபோன ரானோக் என்பவற்றின் குழந்தைகள். விபத்துக்குப் பிறகு அவர்கள் கொலம்பியாவின் காக்வெட்டா மாகாணத்தின் அடர்ந்த காட்டில் தெற்கு காக்வெட்டா பிரிவில் உள்ள காட்டில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.அங்குள்ள குச்சிகள் மரக்கிலைகளைப் பயன்படுத்தி ஒரு மேம்படுத்தப்பட்ட தங்குமிடத்தை கட்டியிருப்பதை பார்த்ததும் யாரோ உயிர் பிழைத்ததாக நம்பினர். பின்னர் ஒரு போத்தல் குழந்தை பால், பாதி சாப்பிட்ட பழ துண்டுகள், கத்தரிக்கோல், ரிப்பன் ஆகிய கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விபத்தில் விமானி உட்பட மூன்று பெரியவர்கள் இறந்தனர் மற்றும் அவர்களின் உடல்கள் விமானத்திற்குள் கண்டெடுக்கப்பட்டனர்.40 மீட்டர் உயரம் வரை வளரும் ராட்சத மரங்கள், காட்டு விலங்குகள், கனமழை ஆகியவற்றுக்கு இடையே தேடுதல் சற்று கடினமாக இருந்தது. உதவிக்கு 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன, விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ரேடார்களிலிருந்து விமானம் காணாமல் போன சில நிமிடங்களுக்கு முன் என்ஜின் கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார்.