இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 6.55 க்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)