இலங்கை செய்தி

முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி!

யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மோசடிக் கும்பல் உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனியார் தொலைத்தொடர்பு சேவை ஒன்றின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்திற்கு வந்த வங்கியின் கடவுச்சொற்களை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணத்தினைத் திருடியுள்ளனர்.

அதேபோன்று முதியவர் ஒருவரிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு அவருக்கும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது வங்கி தகவல்களை பெற்றதுடன், வங்கியில் இருந்து தொலைபேசிக்கு வந்த கடவுச்சொற்களையும் பெற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை களவாடியுள்ளதாகத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் வங்கியின் கடவுச்சொற்களை (OTP) இலக்கங்களை வேறு நபர்களுக்கு பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை