200 கோடியை தட்டித் தூக்குமா இன்று வெளியான கேம் சேஞ்சர்…
தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.
இன்று ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் வெளியீடாக வெளியாகி உள்ளது. ‘கேம் சேஞ்சர்’ ப்ரீ புக்கிங் வசூலே பல கோடி என்பதால், இப்படம் கண்டிப்பாக ரூ.200 கோடி வசூலை எட்டும் என திரையுலகினர் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயருக்கு ஏற்ப, ‘கேம் சேஞ்சர்’ படத்தை சுமார் 400 கோடி செலவில் இயக்கி முடியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்திற் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான, தில் ராஜு தயாரித்துள்ளார்.
அரசியல் மற்றும் சமூக கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாக்கியுள்ள இந்த படத்தில், ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தன்னுடைய கிராமத்தில் தண்ணீர் வசதி பெற போராடும் கேரக்டரில் அப்பா ராம் சரண் நடிக்க, ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் மகன் நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி நடிக்க, எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டி உள்ளார். இவர்களை தவிர சமுத்திரகனி, ஜெயராம், சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடைசியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை தழுவிய நிலையில்… இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் மூலம் தன்னுடைய அழுத்தமான கம் பேக்கை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராம் சரணுக்கு இப்படம் ரூ.1000 கோடி வசூலை கொடுக்குமா? என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், இன்று காலை முதலே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று உலகம் முழுவதும் வெளியாகும் கேம் சேஞ்சர் திரைப்படம், ஃப்ரீ புக்கிங்கில் மட்டுமே முதல் நாளில் 65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர, இப்படத்திற்கு நிலவி வரும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படம் முதல் நாளில் ரூ.200 கோடி வசூல் செய்வது உறுதி என நெட்டிசன்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.