இலங்கை

இலங்கை: கிழக்கிற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் தேவை! ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மற்றும் வடக்கு, தென், மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால், கிழக்கு மாகாணத்தில் அந்த அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்று இல்லாதமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிகளவு உல்லாசப்பிரயாணிகள் வருகை தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்