சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய தமிழருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் சைக்கிளில் சென்ற முதியவரை லொரியால் மோதி கொலை செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டகை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் ஜாலான் யூனோஸ் என்ற பகுதியிலிருந்து துவாஸ் நகருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லொரியை இந்தியாவைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
இவருக்கு உதவியாக ராஜேந்திரன் என்பவர் லொரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவருக்கு வழி விடாமல் உடையப்பன் லாரியை விட்டு தடுக்க முயன்றனர். அப்போது லாரி எதிர்பாராத விதமாக சைக்கிளில் மோதியது.
இந்த விபத்தில் சைக்கிளில் வந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் உடையப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், இந்த விபத்து ஏற்பட காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.