இலங்கை

இல்ஙகை : மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் திரு.ஜெயநாத் ஹேரத் இன்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்படி கூறியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபையினால் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தாங்கள் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது என்பதால் மீண்டும் முன்மொழிவுகளை மீள்திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.

நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், மின்சார சபை அன்றைய தினம் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை, ஆனால் நவம்பர் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரியது.

ஆனால் அன்றைய தினம் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை எனவும், அதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த திகதியில் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்த போதிலும், முன்மொழிவுகளை ஆராய்ந்து மின்சார கட்டணங்களை திருத்துவதற்கு 06 மற்றும் 8 வாரங்களுக்கு இடைப்பட்ட கால அவகாசம் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்