குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களுக்கும் விசேட அறிவிப்பு
குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொள்கிறது.
குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் வரும் 31ம் திகதிக்கு முன்னதாக கைரேகையை வழங்க வேண்டும் என குவைத் உள்துறை அமைச்சகம் சிறப்பு அறிவிப்பில் அறிவித்துள்ளது.
அதன்படி, ஹவாலி, பர்வானியா, அஹ்மத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனரக அலுவலகங்களில் கைரேகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குவைத் உள்துறை அமைச்சகம், கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடலாம் என்று அறிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)