செய்தி

டெல்லியில் நச்சுப் புகைமூட்டம்; விமானம், ரயில் சேவை மற்றும் அதிகமானோர் மூச்சுப் பிரச்சினையால் பாதிப்பு

இந்தியத் தலைநகர் புதுடெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கடும் நச்சுப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.அதன் காரணமாக விமான, ரயில் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. இருமல், மூச்சுப் பிரச்சினைக்கு ஆளானதாகக் குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பிலான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று டெல்லியின் சராசரி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (AQI – ஏகியூஐ) தொடர்ந்து 400க்கு மேல் பதிவானது. டெல்லியின் பத்பர்கஞ் பகுதி ஆக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்று காற்றுத் தூய்மைக்கேட்டைக் கணிக்கும் ‘சமீர்’ எனும் செயலியில் தெரிய வந்தது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி அப்பகுதியின் மாசுக் குறியீடு 470ஆகப் பதிவானது. ஆனந்த் விஹார், அ‌ஷோக் விஹார் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலைமை கிட்டத்தட்ட அதே அளவு மோசமாக இருந்தது.

இந்நிலையில், டெல்லி ஒரு நச்சு வாயுக் கூடத்தைப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

“மாசுக் குறியீடு 35ஆக இருந்த, மிகத் தூய்மையான காற்று இருக்கும் வயநாட்டிலிருந்து டெல்லி திரும்பும்போது நச்சு வாயுக் கூடத்துக்குள் நுழைவதுபோல் உள்ளது. உயரத்திலிருந்து பார்க்கும்போது புகைமூட்டம் மேலும் அதிர்ச்சி தருகிறது,” என்று பிரியங்கா காந்தி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.

“டெல்லியின் காற்றுத் தூய்மைக்கேடு ஆண்டுதோறும் மோசமடைந்து வருகிறது. சுத்தமான காற்றுக்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீர்வுகாணவேண்டும். இது, தனிப்பட்ட கட்சிகள் சார்ந்த பிரச்சினையன்று. குறிப்பாக சிறார், மூத்தோர், சுவாசப் பிரச்சினை இருப்போர் ஆகியோரால் மூச்சுவிட முடியாது. இதற்கு ஏதாவது செய்தே தீரவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

(Visited 39 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி