இலங்கை – நிச்சயமற்ற தன்மையில் அரசாங்கம் : மீண்டும் பதவிக்கு வருவாரா ரணில்?
பாராளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்த குழுவொன்று அதனைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களுக்கு இலங்கை முகம்கொடுத்துள்ளதுடன், நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தெல்கொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பாராளுமன்ற பாரம்பரியம் மற்றும் கலாசாரம் பற்றி அறியாதவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நாட்டை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுவதாக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவதால் அவர் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது.
“எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த குழு ஒன்று சபைக்குள் வர வேண்டும்,”எனக் கூறியுள்ளார்.