முத்தமிடுவதற்கு கூட சில விதிகள் : கடுமையான உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பெண்!
கடுமையான உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் முத்தமிடுவதற்கு கூட சில விதிகளை கடுமையாக பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
கரோலின் க்ரே க்வின் என்ற பெண்ணே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வேர்கடலை, கிவி என பல உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக இவர் தினமும் ஓட்ஸ் மற்றும் ஹைபோஅலர்ஜெனிக் ஃபார்முலாவை மட்டுமே உட்கொண்டு வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் காதல் செய்தாலோ, அல்லது யாரையேனும் டேட் செய்தாலோ அவரிடம் முத்தமிடுவதற்கு முன் அறிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், குறித்த நபர் 24 மணித்தியாலத்தில் ஒவ்வாமை ஏற்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முத்தமிடுவதற்கு முன்பு அவர் பல்துலக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விதிகளை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை மீறினால் ஒவ்வாமையால் மூச்சிவிடுவதில் சிரமம், அலர்சி மற்றும் மயக்கம் போன்ற வேறு பிரச்சினைகளை தான் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





