இலங்கை செய்தி

தமிழரசின் முடிவால் தமிழ் பொது வேட்பாளருக்கு பாதிப்பில்லை

தமிழரசு கட்சி அறிவித்த முடிவினால் , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

தமிழரசு கட்சியினர் முழுமையாக சஜித் பிரேமதசாவிற்கு ஆதரவு வழங்கவில்லை.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போதும் தமிழ் பொது வேட்பாளருக்கே தனது ஆதரவை தெரிவித்து வருகின்றார்

தமிழரசு கட்சியின் புதிய தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்கு வந்து கட்சியினருடன் பேசி முடிவெடுப்பார் .

அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்பதனால் , நாம் அது பற்றி பேச முடியாது.

பல கட்சிகள் ஒன்றாக ஒன்றிணைத்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறோம்.

தமிழரசு கட்சியினர் சஜித்துக்கு ஆதரவு என தெரிவித்துள்ளமை , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கல் செலுத்தாது என தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை