கொழும்பில் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கொழும்பு உள்ளிட்ட பல புறநகர் நகரங்களில் சில மணித்தியாலங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்படி பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் மக்களும், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 45 times, 1 visits today)