அலாஸ்காவில் அதிகரிக்கும் பதற்றம் : மனித குலம் மூன்றாம் உலக போர் ஒன்றை எதிர்கொள்ள நேரிடும்!!
மனித குலம் மூன்றாம் உலக போர் ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் என அரசியில் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு சீன மற்றும் இரண்டு ரஷ்ய நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் அலாஸ்கா சர்வதேச கடற்பரப்பின் மீது பறந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனேடிய போர் விமானங்கள் அவசரமாக பதிலடி கொடுத்தன.
இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கும் மாஸ்கோவும் ரஷ்யாவையும் அலாஸ்காவையும் பிரிக்கும் பெரிங் கடல் மீது கூட்டு வான் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டது.
இருப்பினும் கூட்டு வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) சீன மற்றும் ரஷ்ய இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை என்று வலியுறுத்தியது.
இந்நிலையிலேயே இவ்வாறான தொடர்ச்சியான மோதல்கள் மனித குலம் அடுத்த உலக போருக்கு தயாராகி வருவதை எடுத்துக் காட்டுவதாக நிபுணர்களால் விமர்சிக்கப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)