இலங்கையின் பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு!
இலங்கையில் இன்று (26.07) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. 50 முதல் 55 வரை காற்று வீசக்கூடும்.
தீவின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது கி.மீ. 30 முதல் 40 வரை காற்று வீசும்.
(Visited 4 times, 1 visits today)