இஸ்ரேலியப் பிரதமரை சந்திக்கவுள்ள டிரம்ப்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது வாஷிங்டனில் இருக்கும் நெட்டன்யாஹூவின் வேண்டுகோளுக்கு ஏற்ப புளோரிடாவில் உள்ள தம் உல்லாசத் தலத்தில் சந்திப்பு நடக்கும் என்று டிரம்ப் கூறினார்.
நெட்டன்யாஹூ நாளை அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப்புடனும், ஜனநாயக் கட்சி வேட்பாளராகவுள்ள ஹாரிஸுடனும் நட்புறவைப் பேண வேண்டிய கட்டாயம் நெட்டன்யாஹூவுக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பைடன் அறிவித்ததால், இஸ்ரேல் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது.
(Visited 3 times, 1 visits today)