ஜெர்மனியில் வீதியில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி – DNA சோதனையில் பொலிஸார்
ஜெர்மனியில் அதி வேக போக்குவரத்து பாதையில் பயணித்த வாகனம் மீது கல் எறியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அவ்வாறு கல் எறிந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ 1 என்று சொல்லப்படும் அதிவேக போக்குவரத்து பாதையில் பயணம் செய்த காரின் மீது மேல் காணப்படும் பாலத்தில் இருந்து கற்கள் எறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கற்கள் எறியப்பட்ட காரணத்தினால் காரில் பயணம் மேற்கொண்டவர்கள் பரிதாகமாக தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காரின் மீது கல் வீச்சு மேற்கொண்டவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்லில் உள்ள DNA அலகுகள் பற்றி ஆராய்வு செய்வதன் மூலம் குற்றவியல் சம்பவங்களை மேற்கொண்டவர்களை கைது செய்ய முடியும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால் விஷேட ஆய்வு நடவடிக்கைகள் மூலம் DNA அலகுகள் பிரித்து மாதிரி படிவங்கள் எடுக்கப்படவுள்ளது. பின்னர் அதனை குறித்த பிரதேச வாசிகளின் DNA அலகுகளுடன் ஒப்பிடப்பட்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.