மத்திய அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பனாமா. இந்நாட்டின் தலைநகரில் பனாமா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை மாணவ, மாணவிகள் நேற்று களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவ, மாணவிகள் மீது சரமாரியாக சுட்டார்.இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
(Visited 28 times, 1 visits today)