செய்தி விளையாட்டு

T20 WC – பப்புவா நியூ கினியா வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டோனி உரா மற்றும் அசாத் வாலா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் டோனி உரா 2 ரன்னிலும், அடுத்து வந்த லேகா சியாக்கா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து செசெ பாவு, அசாத் வாலா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் அசாத் வாலா 21 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து களம் இறங்கிய ஹிரி ஹிரி 2 ரன்னிலும், சார்லஸ் அமினி 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கிப்ளின் டோரிகா களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய செசெ பாவு அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.

See also  இலங்கை வங்கி கட்டமைப்பு ஆபத்தில் - ஒன்லைன் மூலம் இடம்பெறும் மோசடியால் நெருக்கடி

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பப்புவா நியூ கினியா தரப்பில் அதிகபட்சமாக செசெ பாவு 50 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரசல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியில் சார்லஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக பிராண்டன் கிங்குடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 27 ரன்களும், அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 34 ரன்களும், அடுத்து களமிறங்கிய ரவ்மேன் பவல் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ரூ ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

See also  பிரான்ஸில் 2 மில்லியன் முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

இறுதியில் ரோஸ்டன் சேஸ் 42 (27) ரன்களும், ஆண்ரூ ரசல் 15 (9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. பப்புவா நியூ கினியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆசாத் வாலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்மூலம் பப்புவா நியூ கினியா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணி, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content