தி.மு.க பிரமுகர் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக சென்னையை சேர்ந்த முன்னாள் தி.மு.க பிரமுகர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 26ம் திகதி வரை நீட்டித்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்துள்ள 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக ஜூலை 26ம் திகதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)