ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இருவருடன் தொடர்பை ஏற்படுத்திய ஈரானிய அதிகாரி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்தை சந்தித்ததாகவும், ஹெலிகாப்டரில் இருந்த பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஹெலிகாப்டர்கள் பயணித்ததாகவும், அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பின்னர் அதில் பயணித்த ஒருவருடனும், பணியாளர்களில் ஒருவருடனும் சுருக்கமான தொடர்பு ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியாளர்கள் கடினமான சூழ்நிலையில் பல மணிநேரம் உழைத்து வருகின்றனர்.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
(Visited 8 times, 1 visits today)