சிங்கப்பூரில் கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்
சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் நடந்த சில கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் இருந்ததற்கான உதாரணங்களை சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலும் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக அவர் கறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரின் மத்தியில் இருப்பதாகவும், அப்பாவி உயிர்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் கொடூரமான குற்றங்களைச் செய்த பல சமீபத்திய வழக்குகள் இருந்ததால் இது முக்கியமானது.
இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நேற்றை போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்த அமைச்சர்நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டார்.
2023ஆம் ஆண்டு உள்துறை அமைச்சு நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்ற 69 சதவீதமானோர் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதே பொருத்தமானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவோ வலுவாக ஆதரிப்பதாகவோ தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டுஇந்த விகிதம் 66 சதவீதமாக இருந்ததைச் சுட்டிய அமைச்சர் இவ்வாண்டுப் பிற்பகுதியில் இக்கருத்தாய்வின் முழு அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
இவ்வட்டாரத்தின் பிற நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தாய்வில், 87 சதவீமானோர் மரணதண்டனை விதிப்பதால் போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படுவதாகக் கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.