அதானி நிறுவனத்துடன் 20 ஆண்டுகால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை
மன்னார் மற்றும் புனரினில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உத்தேச திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு 8.26 அமெரிக்க சென்ட் என்ற இறுதி கட்டணத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இது உண்மையான மாற்று விகிதத்தின் படி இலங்கை ரூபாயில் செலுத்துவதற்கு உட்பட்டது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் எம்.எஸ்.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு 20 வருட காலத்திற்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் புனரின் காற்றாலை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மார்ச் 7ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, குறித்த நிறுவனம் முன்வைத்த திட்டப் பிரேரணையை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை ஒருமித்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை உரிய அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, மின்சாரத்துறையின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றன.
அப்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கேள்வியொன்றை முன்வைத்தார்.