இந்தியா செய்தி

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சுபலட்சுமி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கள்ளக்காதல் மிகப்பெரிய பிரச்சனையாக முடியும் இதனால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகமாக நடைபெறுகிறது இந்த கள்ளக்காதலில் அதிகமாக படித்த நபர்கள் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நபர்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.

அதனால் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் இருக்கிறது தற்போது அதுபோன்ற ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது கள்ள காதலியை கொன்று அவரது உடலை ஏற்காடு மலைப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதி

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதி 40 அடி பாலம் அருகே கடந்த 20ஆம் திகதி அதிக துர்நாற்றம் வீசி உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்கள்.

விரைந்து வந்த காவல் துறை அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக தேடியது அப்பொழுது பெரிய சூட்கேசில் துர்நாற்றம் வீசியதை கண்டுபிடித்தார்கள் தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்த சூட்கேசில் உடல் இருப்பது தெரிய வந்தது.

இதனால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு துறை சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதில் அரை நிர்வாணமாக 30 வயது தக்க இளம் பெண்ணின் உடல் இருந்தது.

இவர் யார் என்று காவல்துறைக்கு தெரியவில்லை மேலும் சூட்கேஸ் புதிதாக இருந்தது அதில் க்யூ ஆர் கோடு விலை பட்டியல் இருந்தது அதை அடிப்படையாக வைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை அந்த சூட்கேஸ் கோவையில் வாங்கியது தெரிய வந்தது.

விரைந்து கோவைக்கு சென்ற காவல்துறை

அந்த லேபிளை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள் அப்பொழுது அந்த சூட்கேஸை வாங்க வந்த இரண்டு நபர்கள் சிசிடி காட்சி மூலம் தெரிய வந்தது அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை செய்தபோது கொலை செய்தது ஏன் என்று தெரியவந்துள்ளது.

கொலை குற்றவாளி யார்

காவல்துறை கோவையில் முகமிட்டு விசாரணை நடத்தினார்கள் அப்பொழுது மன்னார்குடியை சேர்ந்த நடராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

ஏன் கொலை செய்தார் நடராஜன்

கத்தார் நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் அதே நிறுவனத்தில் அவருக்கு அருகில் சுபலட்சுமி பணியாற்றி வந்துள்ளார் இரண்டு நபர்களும் தமிழர்கள் என்பதால் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்பு அது காதலாக மாறியுள்ளது நடராஜன் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சுபலட்சுமி அவரிடம் காதலில் ஈடுபட்டுள்ளார் இந்தியாவுக்கு திரும்பிய இரண்டு நபர்களும் வீட்டில் சிறிது காலம் தங்கி விட்டு.

மறுபடியும் கத்தாருக்கு செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு கோவைக்கு வந்து தனியாக வீடு எடுத்து ஒரு வருடம் தங்கியுள்ளார்கள்ஃ அதன்பிறகு நடராஜன் குழந்தைகளை பார்க்க சென்றுள்ளார்.

அப்பொழுது கையில் சுபலட்சுமி என்று பச்சை குத்தியதை பார்த்து அவருடைய மனைவி சண்டை போட்டுள்ளார். உடனடியாக அதை நடராஜன் நீக்கியுள்ளார். பின்பு சிறிது நாட்கள் மன்னார்குடியில் இருந்து விட்டு கோவைக்கு வந்த நடராஜன் சுபலட்சுமி உடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

அப்பொழுது சுபலட்சுமி கையில் இருந்த டாட்டூ காணாமல் போனது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது நடராஜன் மலுபுலான பதிலை தெரிவித்துள்ளார். மேலும் தொலைபேசியை சோதனை செய்தபோது நடராஜன் குழந்தைகள் மனைவியுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

கடுமையான வாக்குவாதம் கொலையில் முடிந்தது

சுபலட்சுமி ஏற்கனவே நடராஜனுக்கு திருமணம் நடைபெற்றது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது கோபமடைந்த நடராஜன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனால் சம்பவ இடத்தில் சுபலட்சுமி உயிரிழந்து உள்ளார். அதன் பிறகு தனது நண்பனுக்கு தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்துள்ளார். பெரிய சூட்கேஸ் வாங்கி அதில் சுபலட்சுமி உடலை வைத்து கொல்லிமலை என பல இடங்களில் சுபலட்சுமி பாடியை மறைப்பதற்கு சுற்றியுள்ளார்கள்.

அப்பொழுது நடராஜன் ஏற்கனவே தனது குழந்தைகளுடன் ஏற்காடு சென்றுள்ளார். அங்கு பெரிய பள்ளங்கள் இருப்பது நினைவு வந்துள்ளது உடனடியாக.

இரண்டு நபர்களும் ஏற்காடு சென்றுள்ளார்கள் இரவு 2 மணி அளவில் 40 அடி பல்லத்தில் சுபலட்சுமி உடலை வீசி எரிந்துவிட்டு மறுபடியும் பணிக்கு சென்றுள்ளார் நடராஜன்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி