புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர் பிழைப்பு – ஆய்வில் தகவல்
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சர்வதேச குழந்தை புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று, அந்நாட்டின் முதல் ஆராய்ச்சி மூலம் புற்றுநோய் சிகிச்சை பெற்ற குழந்தைகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 20 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் கடந்த 2016 முதல் 2024 வரை சிகிச்சை பெற்ற 5,400 குழந்தைகளின் தகவல்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி, புற்றுநோய்க்கு எதிரான தொடர்ச்சியான கவனம் மற்றும் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.




