இலங்கை செய்தி

வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!