போரில் 500 குழந்தைகள் உயிரிழப்பு!
ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து சுமார் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரஷ்ய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
தரவுகளின்படி, யுத்தத்தின் போது 9,396 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 16,646 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)





