ChatGPT-யிடம் கேட்கக் கூடாத 5 விடயங்கள்

கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT, பல கோடிக்கணக்கான யூஸர்கள் பயன்படுத்தும் வகையில் வெகுவிரைவாக உலகளாவிய பிரபலத்தை பெற்றுள்ளது. கூகுள் அடைந்ததை விட 5.5 மடங்கு வேகமாக ஒரு பில்லியன் தினசரி தேடல்களை எட்டியதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த டூல் ரைட்டிங், கோடிங், ரிசர்ச் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யூஸர்களுக்கு உதவுகிறது. இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் சரி, அதற்கு பதிலளிக்கும் திறன் ChatGPT-க்கு இருந்தாலும், இதை முழுவதுமாக நம்பியிருக்க கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் ChatGPT-யிடம் கேட்பதை நாம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த டூல் ரைட்டிங், கோடிங், ரிசர்ச் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யூஸர்களுக்கு உதவுகிறது. இது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் சரி, அதற்கு பதிலளிக்கும் திறன் ChatGPT-க்கு இருந்தாலும், இதை முழுவதுமாக நம்பியிருக்க கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் ChatGPT-யிடம் கேட்பதை நாம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எதற்கும் பதிலளிக்க முடியும் என்பதற்காக, ChatGPT ஃபீஸ் கேட்காத உங்களின் மருத்துவராக இருக்கும் என்று அர்த்தமல்ல. நேரில் சென்று மருத்துவரை சந்திப்பது சிலருக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவோ அல்லது நோய் என்ன என்பதை கண்டறியவோ ChatGPT-ஐ நம்பியிருக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஹெல்த் டிப்ஸ்களை கேட்காதீர்கள்: எதற்கும் பதிலளிக்க முடியும் என்பதற்காக, ChatGPT ஃபீஸ் கேட்காத உங்களின் மருத்துவராக இருக்கும் என்று அர்த்தமல்ல. நேரில் சென்று மருத்துவரை சந்திப்பது சிலருக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவோ அல்லது நோய் என்ன என்பதை கண்டறியவோ ChatGPT-ஐ நம்பியிருக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் நண்பரின் அக்கவுண்ட்டில் உள்நுழைய ChatGPT-ஐ கேட்பது நாம் செய்யக் கூடாத ஒன்று. ஏனென்றால் ஹேக்கிங் செய்வது சட்டவிரோதமானது. மேலும் இந்த வகையான தவறான விஷயங்களை தடுக்க இதுபோன்ற AI டூல்ஸ்கள் கடுமையான பாதுகாப்பு அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
ஹேக்கிங் டிப்ஸ் கேட்காதீர்கள்: உங்கள் நண்பரின் அக்கவுண்ட்டில் உள்நுழைய ChatGPT-ஐ கேட்பது நாம் செய்யக் கூடாத ஒன்று. ஏனென்றால் ஹேக்கிங் செய்வது சட்டவிரோதமானது. மேலும் இந்த வகையான தவறான விஷயங்களை தடுக்க இதுபோன்ற AI டூல்ஸ்கள் கடுமையான பாதுகாப்பு அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுவாக சட்ட நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானதாகவும், subjective-ஆகவும் இருக்கலாம். எனவே, தரவு அல்லது பரிந்துரைகளுக்கு AI சாட்போட்டை நம்பியிருப்பது உண்மையில் தீங்கு விளைவிக்கும். நீங்கள் சட்ட நடைமுறைகள் குறித்த அடிப்படை அறிவை நாடவில்லை என்றால் உங்களுக்கு தகுந்த ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட பயிற்சியாளரை நேரில் அணுக வேண்டும்.
சட்ட ஆலோசனை: பொதுவாக சட்ட நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானதாகவும், subjective-ஆகவும் இருக்கலாம். எனவே, தரவு அல்லது பரிந்துரைகளுக்கு AI சாட்போட்டை நம்பியிருப்பது உண்மையில் தீங்கு விளைவிக்கும். நீங்கள் சட்ட நடைமுறைகள் குறித்த அடிப்படை அறிவை நாடவில்லை என்றால் உங்களுக்கு தகுந்த ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட பயிற்சியாளரை நேரில் அணுக வேண்டும்.
ChatGPT-ன் கணிப்புகளின் அடிப்படையில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்வது குறித்த முடிவுகளை எடுப்பது ஒருவேளை உங்களுக்கு கணிசமான அளவில் பொருளதார இழப்பை ஏற்படுத்த கூடும். எனவே பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றிய தகவல்களை நீங்களே நேரடியாக சேகரிப்பது அல்லது தொடர்பு மற்றும் நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது அபாயங்களை தவிர்க்க உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நிதி சார்ந்த கணிப்புகள்: ChatGPT-ன் கணிப்புகளின் அடிப்படையில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்வது குறித்த முடிவுகளை எடுப்பது ஒருவேளை உங்களுக்கு கணிசமான அளவில் பொருளதார இழப்பை ஏற்படுத்த கூடும். எனவே பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றிய தகவல்களை நீங்களே நேரடியாக சேகரிப்பது அல்லது தொடர்பு மற்றும் நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது அபாயங்களை தவிர்க்க உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வன்முறை, தீங்கு அல்லது ஆபத்தான விஷயங்கள் சார்ந்த எந்தவொரு கேள்வி கோரிக்கைக்கும் ChatGPT பதிலளிக்காது. பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சர்ச்சைக்குரிய ஒன்றை கேட்டால், ஒரு வகையான மறுப்பு பதில் ChatGPTயிடம் இருந்து வரும்.
வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?: வன்முறை, தீங்கு அல்லது ஆபத்தான விஷயங்கள் சார்ந்த எந்தவொரு கேள்வி கோரிக்கைக்கும் ChatGPT பதிலளிக்காது. பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சர்ச்சைக்குரிய ஒன்றை கேட்டால், ஒரு வகையான மறுப்பு பதில் ChatGPTயிடம் இருந்து வரும்.