உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிகப்பெரிய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
லாபைவ்கா கிராமத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் கிட்டத்தட்ட 500 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று லிவிவ் பிராந்தியத் தலைவர் மாக்சிம் கோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)