உக்ரைன் – ரஷ்யா இடையில் 32 மணிநேர போர் நிறுத்தம் அறிவிப்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 32 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இதை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி வரவேற்றதோடு, உக்ரைன் அதற்கேற்ப செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான ஒப்பந்தத்தை நோக்கி உக்ரைனும் ரஷ்யாவும் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் சிறப்புத் தூதர், அமெரிக்காவில் உள்ள டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.




