இலங்கை செய்தி

23,000 பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஆசிரியர் நியமனம் உறுதி

23000 ஆசிரியர்களை இணைத்துககொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் அவர்களை சேவையில் இணைப்பதற்கான பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடம் உட்பட ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி இவ்வாறு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கவுள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!