இலங்கை

இலங்கையில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு – வீட்டில் இருந்தவருக்கு நேர்ந்த கதி

  • March 31, 2025
  • 0 Comments

அமபலந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொக்கல, அம்பலாந்தோவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

வட அமெரிக்கா

சர்வதேச மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்கா – சமூக வலைத்தள பதிவால் நேர்ந்த கதி

  • March 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துகளைப் பகிர்ந்து, லைக் செய்தவாகவும் அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவ்வாறான செயல்களில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Time Travel செய்ய விரும்புபவர்களுக்காக கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி

  • March 31, 2025
  • 0 Comments

Time Travel செய்யும் வகையில் புதிய அம்சத்தை கூகுள் மேப்பில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருந்தாலும், நேரில் சென்று பார்ப்பது என்பது சாத்தியமற்றது. கடந்த நூற்றாண்டை நேரில் சென்று பார்க்க முடியாது என்றாலும், அதனை டிஜிட்டல் முறையில் காணலாம் என்ற நோக்கில், கூகுள் நிறுவனம் புதிய யுக்தியைக் கொண்டு வந்துள்ளது. கூகுள் மேப் அல்லது கூகுள் எர்த் தளங்களில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

தென் கொரியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ – இறுதி சடங்கில் பற்ற வைத்த நெருப்பினால் விபரீதம்

  • March 31, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் இறுதி சடங்கின் போது பற்ற வைத்த நெருப்பினால் காட்டுத் தீ உண்டாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர். இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கையை மாற்ற தயாராகும் ஜனாதிபதி!

  • March 31, 2025
  • 0 Comments

Lபிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னி கத்திக்குத்துத் தாக்குதல் – மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதி

  • March 30, 2025
  • 0 Comments

சிட்னியின் வடமேற்கில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு மூன்று குழந்தைகளும் ஒரு பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அவசர சேவைகள் பிரிவுகள் பால்காம் ஹில்ஸில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டன. 10 வயது சிறுவன், 13 வயது மற்றும் 16 வயது சிறுமி மற்றும் 46 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . சம்பவ இடத்திலேயே […]

இந்தியா செய்தி

மராட்டிய மாநிலத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

  • March 30, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தானே மாவட்டம் முப்ரா நகரில் இப்போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தகவல் […]

ஐரோப்பா செய்தி

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர மக்ரோன் வலியுறுத்தல்

  • March 30, 2025
  • 0 Comments

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இரு தலைவர்களுக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பில் “காசா மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு போர்நிறுத்தத்திற்குத் திரும்புமாறு” வலியுறுத்தினார். இஸ்லாமியக் குழுவான ஹமாஸுடனான பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சு நடத்தத் தொடங்கிய நேரத்தில் மக்ரோனின் தலையீடு வந்துள்ளது. “காசா மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு, ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டிய போர்நிறுத்தத்திற்குத் திரும்புமாறு இஸ்ரேலிய பிரதமரிடம் நான் அழைப்பு விடுத்தேன். மனிதாபிமான […]

இலங்கை செய்தி

இலங்கை: கேகாலை மருத்துவமனையின் சிறப்பு மருத்துவரைத் தாக்கிய நபர் கைது

  • March 30, 2025
  • 0 Comments

கேகாலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக கேகாலை பொது மருத்துவமனையின் முன்பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் சிறப்பு மருத்துவரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த 29 வயதுடையவர். காயமடைந்த சிறப்பு மருத்துவர் தற்போது கேகாலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் […]

ஆசியா செய்தி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிய உலக நாடுகள்

  • March 30, 2025
  • 0 Comments

மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மியான்மரின் அண்டை நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி உதவியுள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தது 18 பேர் இறந்த தாய்லாந்தும் மியான்மருக்கு உதவிகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கவிடயமாகும். பெய்ஜிங் 135 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் நிபுணர்களை மருத்துவக் கருவிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் போன்ற பொருட்களுடன் அனுப்பியதாகவும், […]