தனிப்பட்ட காரணங்களால் இலங்கை தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா!
இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்கு செல்ல உள்ளது. இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு இந்திய அணி புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது பொறுப்பேற்றுள்ளார். டி20 உலக கோப்பையை […]













